ஈ.பி.டி.பி.க்கு 20 ஆசனங்கள் ஒதுக்கீடு?

daklasவடமாகாண சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு( ஈபிடிபி) 20 ஆசனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ் பொது நூலகத்தில் நடைபெற்ற வடமாகாண அபிவிருத்தி தொடாபான ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டது.

இந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சார்பில் போட்டியிடும் 36 வேட்பாளர்களில் தமது கட்சிக்கு 20 ஆசனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்லில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெறும் பட்சத்தில் அதன் முதலமைச்சர் வேட்பாளரை தீர்மானிக்கும் சத்தியாக எமது கட்சி இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபைத்தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அரசாங்கத்துடன் இணைந்தா அல்லது தனித்தா போட்டியிடும் என்று இதுவரையிலும் உத்தியோகபூர்வமாக அறிவிக்காத நிலையில் அரசாஙத்துடன் இணைந்தே ஈபிடிபி போட்டியிடவுள்ளது என்ற கருத்தை அமைச்சர் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts