ஈ.பி.டி.பி காரைநகர் அலுவலகம் மீது கல்வீச்சு

attack-attackஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் காரைநகர் அலுவலகம் மீது நேற்று திங்கட்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களினால் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதல் சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் இடமபெற்றுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் காரைநகர் அலுவலக உறுப்பினர் கண்ணன் தொலைபேசி ஊடாக முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts