ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இன்று சத்தியப்பிரமாணம்!

நடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று (17) கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் காலை 9 மணியளவில் நடைபெறவுள்ள குறித்த நிகழ்வில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட 98 உறுப்பினர்கள் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா முன்னிலையில் சந்தியப்பிரமாணம் எடுக்கவுள்ளனர்.

குறித்த நிகழ்வில் கட்சியின் மாவட்டங்களினது நிர்வாக செயலாளர்கள் உதவி நிர்வாக செயலாளர்கள் மற்றும் பிரதேசங்களினது நிர்வாக செயலாளரகள் உதவி நிர்வாக செயலாளர்களுடன் பல முக்கியஸ்தர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

Related Posts