ஈழ அகதி மர​ணம் – தமிழ்நாடு மின் வாரியத்தின் அதிரடி முடிவு

தமிழக அகதியின் மரணத்தை அடுத்து, மின்சாரம் கொண்டு செல்லப்படும் உயர் அழுத்த கோபுரங்களில், பாதுகாப்பு நடவடிக்கை எடுக்குமாறு, பொறியாளர்களை, தமிழ்நாடு மின் வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

மின் கோபுரங்கள் சராசரியாக, 60 அடி உயரத்தில் நிறுவப்படுகின்றன. மதுரை மாவட்டம், உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் வசித்த ரவீந்திரன் என்பவர், நேற்று முன்தினம், உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி, தற்கொலை மிரட்டல் விடுத்த போது, திடீரென கீழே விழுந்து உயிரிழந்தார்.

இதையடுத்து, மின் கோபுரங்களில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்குமாறு, பொறியாளர்களுக்கு, மின் வாாரியம் அறிவுறுத்தி உள்ளது என தமிழக ஊடகமான தினமலர் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மின் கோபுரங்களில், 110, 230, 400 கி.வோ., திறன் உடைய, மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. இதன் மேல் யாரும் ஏறாதவாறு, இரும்பு வேலி அமைக்க வேண்டும். ஆனால், கோபுரம் அமைக்கும் ஒப்பந்த நிறுவனங்கள், வேலியை அமைப்பதில்லை. இதனால், சிலர், மின் கோபுரங்களில் உள்ள குறுக்கு கம்பிகளை திருடிச் செல்கின்றனர்.

தற்போது, ஒருவர் அதன் மேல் ஏறி தற்கொலை செய்துள்ளார். இதனால், மின் கோபுரங்கள் மீது யாரும் ஏறாமல் இருக்க, பாதுகாப்பு நடவடிக்கை எடுக்குமாறு, மின் தொடரமைப்பு பிரிவு பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.

Related Posts