ஈழ அகதி குடும்பம் மீது தாக்குதல்!!

ஈழ அகதி குடும்பம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்திய நான்கு ஈழ அகதிகள் கைதுசெய்யப்பபட்டுள்னர்.

பொள்ளாச்சி அருகே அமைந்துள்ள கோட்டூர் அகதிகள் முகாமில் உள்ள அகதிகள் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த நான்கு சந்தேகநபர்களும் புழல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு, இதுவொரு சிறிய குழு மோதல் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

என்.பிரதீபன், பி.பார்தீபன், அவரது சகோதரர் பி.சஞ்சய் எனப்படும் கார்த்திக் மற்றும் எஸ்.விஜயராஜா ஆகியோரே சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நால்வரும் கோட்ரூரில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்கு வர்ணம் பூசுவதற்கான பணிகளுக்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், எனினும் அதே முகாமைச் சேர்ந்த விமல் என்ற ஈழ அகதி அவர்களை விடவும் குறைந்த சம்பளத்திற்கு குறித்த வீட்டிற்கு வர்ணம் பூசுவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒப்பந்தத்தை இழந்த கோபத்தில் குறித்த நால்வரும் விமலைத் தேடி அவரது இல்லத்திற்கு சென்றுள்ளனர்.

எனினும் விமல் அங்கு இல்லையென்று தெரிந்துகொண்ட அவர்கள் அவரது தந்தை அருள் இன்பாவை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

தகாத வார்த்தைகளால் திட்டவேண்டாமென அருள் இன்பாவின் மற்றுமொரு புதல்வர் கிஷாந்தன் மற்றும் அவரது சகோதரரி கஜந்தனி ஆகியோர் தடுக்க முயன்ற சந்தர்ப்பத்தில் குறித்த நால்வரும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Related Posts