ஈழ அகதிகள் முகாமில் அடிதடி – நால்வர் மீது வழக்கு, இருவர் கைது

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாமில், அடிதடியில் ஈடுபட்ட நான்கு பேர் மீது, பொலிசார் வழக்கு பதிந்து, இருவரை கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும், சிவகுமார், உமேசன், ஆகியோருக்கும், செல்வம், திலீபன் என்பவர்களுக்கும், நேற்று முன்தினம், தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர் என தமிழக ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

இதுகுறித்து, இரு தரப்பினர் அளித்த புகாரையடுத்து, கும்மிடிப்பூண்டி சிப்காட் பொலிசார், நான்கு பேர் மீதும் வழக்கு பதிந்து, சிவகுமார் (38), உமேசன் (24), ஆகிய இருவரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Related Posts