ஈழ அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட மாட்டாது

தமிழ் நாட்டில் உள்ள ஈழ அகதிகளுக்கு இந்தியாவில் இரட்டை குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மத்திய அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி, இந்திய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள ஈழ அகதிகளுக்கு இரட்டைக்குடியுரிமை வழங்கப்படும் என்று, தமிழ் நாட்டின் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் அறிவித்திருந்தார்.

இது தொடர்பில் அண்மையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்திருந்த போதும் பேச்சுவார்த்தை நடத்தி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இரட்டைக்குடியுரிமையை இந்திய அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை.

வெளிநாடுகளில் வசிக்கின்ற இந்திய வம்சாவளியினருக்கு மாத்திரமே இரட்டைக்குடியுரிமை வழங்கப்படுகிறது.

எனவே தமிழ் நாட்டில் உள்ள ஈழ அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts