ஈழத்தில் பிரபலமான சிற்பக்கலைஞரும் ஓவியருமான கலாபூசணம் ஏ.வி. ஆனந்தன் நேற்றயதினம் காலை மாரடைப்பினால் யாழ். போதனா வைத்தியசாலையில் காலமானார்.
யாழ்ப்பாணம் மல்லாகத்தில் வசித்து வரும் இவர், சுனாமிப் பேரலையால் பாதிக்கப்பட்டவர்கள் நினைவாக தனிமரக்குற்றி ஒன்றில் சிற்பம் செய்து பிரபலமடைந்திருந்தார்.
வருடந்தொறும் நினைவு கூறப்படும் சுனாமி நிகழ்வை தனது கலைக்கூடத்தில் நடத்தியும் வந்தார்.
பல கலாசாரப் பாரம்பரியமிக்க சிற்பங்களையும் ஓவியங்களையும் இவர் படைத்துள்ளார்.
இந்த ஆண்டில் இலங்கை அரசின் கலாசார அமைச்சினால் வழங்கப்படும் கலாபூசண விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
யாழ்.திருமறைக்கலாமன்றத்தின் முத்த உறுப்பினரான இவரின் இறுதிக் கிரிகைகள் இன்று அவரின் இல்லதில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.