ஈழத்தமிழர் இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் இரண்டாம் நாள் இன்று!

ஈழத்தமிழர் இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் இரண்டாம் நாள் அஞ்சலி நிகழ்வுகள் வரமராட்சி, பொலிகண்டி- ஊறணி பிரதேசத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.

1985ஆம் ஆண்டு இராணுவத்தினரின் சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டு, குண்டு வீசி படுகொலை செய்யப்பட்ட 50இற்கும் மேற்பட்ட பொதுமக்களின் நினைவாக இன்றைய அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

மே 12ஆம் திகதிமுதல் எதிர்வரும் 18ஆம் திகதிவரை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வட. மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts