ஈராக்குக்கு மேலும் 200 இராணுவ வீரர்களை அனுப்ப அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஒப்பதல் அளித்துள்ளார்.
ஈராக்கில் ஷியா அரசுக்கு எதிராக சுன்னிபிரிவை சேர்ந்த ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.’ போராளிகள் உள்நாட்டு போரில் ஈடுபட்டுள்ளனர். ஈராக் இராணுவம் பலத்துடன் உள்ள போதும் போராளிகளை கட்டுப்படுத்த முடியவில்லை.
காரணம் அவர்களிடம் அதிநவீன போர்க்கருவிகள் உள்ளன. அவற்றை சுன்னிபிரிவை சேர்ந்த அண்டை நாடுகள் வழங்கி உள்ளன. மேலும் அந்நாடுகள் அவர்களுக்கு மறைமுக ஆதரவு அளித்து வருகின்றனர். ஈராக் இராணுவத்தில் உள்ள சுன்னிபிரிவு வீரர்களும் போரில் ஈடுபட மறுக்கின்றனர். இது போன்ற காரணங்களால் அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஈராக்கில் முகாமிட்டிருந்த அமெரிக்கப டைகள் 2011– ஆம் ஆண்டில் வெளியேறின. அதன்பிறகுதான் அங்கு போராளிகள் கை ஓங்கியது. அங்கு முகாமிட்டிருந்தபோது ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். பலத்த சேதம் ஏற்பட்டது.
தற்போது நிலைமையை சமாளிக்க மீண்டும் அமெரிக்க உதவியை ஈராக் நாடியது. ஆனால் ஏற்கனவே ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் உடனடியாக அதில் தலையிட அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா விரும்ப வில்லை. நிலைமையை உற்று கவனிப்பதாக தெரிவித்தார். இராணுவத்தை அனுப்ப மாட்டோம் என்றும் அறிவித்தார்.
அதே சமயத்தில், பக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் அங்கு முகாமிட்டுள்ள இராணுவ வீரர்களை பாதுகாக்கவும், அவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் 300 ஆலோசகர்களை அனுப்புவதாக அறிவித்தார். அவர்களில் பலர் அங்கு சென்று ஈராக் இராணுவ வீரர்களுக்கு போர் பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே, போராளிகளையும் அவர்களின் இருப்பிடங்களையும் கண்காணிக்க ஆளில்லா விமானங்கள் பறக்க விடப்படும் என ஏற்கனவே அமெரிக்கா அறிவித்து இருந்தது.
அதன்படி தலைநகர் பக்தாத் நகரின் மீது அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் பறந்து வட்டமிட்டு வருகின்றன. அவற்றில் ‘ஹெல்பயர்’ என்ற ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன. அமெரிக்க தூதரகங்களின் பாதுகாப்புக்காகவே இந்த ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன என அமெரிக்கா தெரிவித்தது.
இந்நிலையில், ஈராக்குக்கு மேலும் 200 இராணுவ வீரர்களை அனுப்ப அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி, ஏற்கனவே ஈராக்கில் உள்ள 275 அமெரிக்க வீரர்கள், பின்னர் அறிவிக்க ப்பட்ட 300 வீரர்கள், தற்போது அறிவிக்க ப்பட்டுள்ள மேலும் 200 வீரர்கள் என சேர் த்து ஈராக்குக்கு அமெரிக்கா அனுப்பும் இரா ணுவ வீரர்களின் மொத்த எண்ணிக்கை 775 ஆக உயர்ந்துள்ளது.
இவர்கள் அனைவரும் அங்குள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் தலைநகர் பக் தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றை பாதுகாக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்ட்டக னின் செய்தித் தொடர்புத்துறை செயலாளர் கோன் எப் கிர்பி தெரிவித்துள்ளார்.