யாழிலிருந்து அக்கரைப்பற்றுக்குச் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து மீது மடத்தடியில் வைத்து இன்று காலை வாகனத்தில் வந்தவர்கள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில், அதில் பயணம் செய்த பெண் மற்றும் குழந்தை ஆகியோர் காயமடைந்ததுடன், பேருந்தின் முன்பக்க கண்ணாடிகளும் முற்றாகச் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது..
குறித்த பேருந்து, பேருந்து நிலையத்தில் தரித்து நின்றிருந்தவேளை அங்கு வந்த சிலர் பேருந்தில் துண்டுப்பிரசுரம் ஒட்டுவதற்கு முயற்றுள்ளனர். எனினும் அதனை சாரதியும் நடத்துனரும் அதற்கான அனுமதியினை மறுத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்தே மேற்படி பேருந்து மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.