இ.போ.ச சாரதியின் கவனயீனம்!! 16 பேர் வைத்தியசாலையில்!!

கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இ.போ.சபைக்குச் சொந்தமான பேரூந்து ஒன்று போதனா வைத்தியசாலை முன்பாக திடீரென பிறேக் பிடித்த காரணத்தால் 16 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு நேற்று முன்தினம் இரவு வருகை தந்த இ.போ.ச பேரூந்து அதி வேகமாகப் பயணித்துள்ளது. இதன்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை அன்மித்த நிலையிலும் வேகத்தை குறைக்கவில்லை.்இருப்பினும் நகரை அடைந்த நிலையில் பலர் இறங்குவதற்காக இருக்கையை விட்டு எழுந்து நின்றுள்ளனர்.

இதேநேரம் பலர் ஏற்கனவே ஆசணம் இன்றி நின்றும் பயணித்துள்ளனர். இதன்போது ஓர் சந்தர்ப்பத்தில் இ.போ.ச சாரதி திடீரென பேரூந்தின் பிறேக்கைப் பிடித்து நிறுத்திய சமயம் பேரூந்தில் நின்ற அனைவரும் விழுந்தும் அடியுண்டும் படுகாயமடைந்தனர்.

இருப்பினும் பேருந்து வைத்தியசாலைக்கு செல்லாதபோதும் பயணிகள் இறங்கி தாமே போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்குச் சென்றுள்ளனர். இவ்வாறு சென்ற 16 பேரில் 6 பேர் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறுகின்ற நிலையில. ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் வைத்தியசாலைப் பணிப்பாளர் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

Related Posts