இ.போ.ச. ஊழியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் 2ஆவது நாளாகவும் தொடர்கிறது

இலங்கை போக்குவரத்து சபையின் பணியாளர்கள் சிலர் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் 2ஆவது நாளாகவும் தொடர்கிறது.

சிறிகொத்தாவில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்துக்கு முன்னால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்றும் (செவ்வாய்க்கிழமை) தொடர்கிறது.

தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பதவி உயர்வை இரத்து செய்ய சூழ்ச்சி இடம்பெறுவதாக தெரிவித்து அவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கும் முதல் அவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts