இந்திய தலைநகரில் இடம்பெற்ற இஸ்லாமிய மத நிகழ்வில் கலந்துகொண்ட நான்கு இலங்கை பிரஜைகளிற்கு கொரோன தொற்றுள்ளமை மருத்துவபரிசோதனைகளின் மூலம் உறுதியாகியுள்ளது என இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
புதுடில்லியில் இடம்பெற்ற மத நிகழ்வில் கலந்துகொண்ட இலங்கையர்கள் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது என குறிப்பிட்டுள்ள இந்துஸ்தான் டைம்ஸ்
இவர்களிற்பு வைரஸ் உள்ளமையை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
இரு நோயாளிகள் நுவிற்குள் நுழைய முயன்றவேளை மார்ச் 31 ம் திகதி பல்வால் எல்லையில் கண்டுபிடிக்கப்பட்டார்கள் என குறிப்பிட்டுள்ள அதிகாரிகள் ஏனைய இருவரும் உம்ரா என்ற கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு குருதி மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டவேளை நோய் உறுதியாகியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.