Ad Widget

இஸ்லாமிய அரசு அமைப்பினருக்கு எதிராக அமெரிக்க வான் தாக்குதல் ஆரம்பம்

இஸ்லாமிய அரசு ஆயுததாரிகளை எதிர்த்து மோதும் அமெரிக்காவுடைய புதிய தாக்குதல் வியூகத்தின் கீழ் அந்த ஜிகாதி குழுவின் நிலைகள் மீது அமெரிக்கப் படைகள் முதல் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

_us_war_plane_america

மோதல்களில் இராக்கிய பாதுகாப்பு படைகளுக்கு நேரடியாக ஆதரவு வழங்கும் நோக்கத்தில், அமெரிக்காவின் யுத்த விமானங்கள் இராக்கின் வட பகுதியிலும் பாக்தாத் அருகிலும் உள்ள இலக்குகள் மீது குண்டுகள் வீசியுள்ளன.

அதிபர் ஒபாமா இந்த புதிய வியூகத்தை சென்ற வாரம் அறிவிப்பதற்கு முன்பாக, அமெரிக்கப் படையினரை பாதுகாக்கும் நோக்கிலோ அல்லது மனிதாபிமான நோக்கங்களுக்காகவோதான் முன்னதாக நடத்தப்பட்ட வான் தாக்குதல்கள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வந்தன என்று வாஷிங்டன் கூறியிருந்தது.

சமீபத்தில் இராக்கில் பெருமளவான நிலப்பரப்புகளை தாக்குதல் நடத்தி கைப்பற்றியுள்ள இஸ்லாமிய அரசு அமைப்பை எதிர்த்து சண்டையிடுவதற்காக பரந்துபட்ட சர்வதேசக் கூட்டணி ஒன்றை அமெரிக்கா உருவாக்கிவருகிறது.

Related Posts