இஸ்லாத்தை பின்பற்றுமாறு டில்ஷானுக்கு பாக். வீரர் ஆலோசனை

இலங்கை அணியின் கிரிக்கெட் வீரரொருவரை, இஸ்லாமிய மதத்துக்கு ஈர்க்கும் வகையில் செயற்பட்டதாக கூறி, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரொருவர் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விசாரணை நடத்தியுள்ளது.

Shehzad-dilshan

இலங்கை அணியின் வீரரான திலகரட்ன டில்ஷானை பாகிஸ்தான் வீரர் அஹ்மட் செஹாடே இவ்வாறு அழைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டி ஓகஸ்ட் 30ஆம் திகதியன்று இடம்பெற்றது.

இதனையடுத்து வீரர்கள் ஓய்வு அறைக்கு திரும்பும் போது செஹாட், டில்ஷானுடன் பேசிய விடயங்கள் ஒலிப்பதிவாகியுள்ளன.

இதன்போதே. இஸ்லாமிய மதத்திற்கு ஈர்க்கும் வகையில் அவர், டில்ஷானிடம் பேசியுள்ளார்.

இதேவேளை, இக்கருத்தை தான், தனிப்பட்ட ரீதியிலேயே டில்ஷானிடம் கூறியதாக செஹாட் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் டில்ஷானை பாதித்திருக்குமானால் ஏன் அவர் உத்தியோகபூர்வமாக முறையிடவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Posts