இஸ்ரேலில் உள்ள பேஸ்புக் தலைமையகம்மீது யூத ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி சேதமாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
யூதர்கள் மற்றும் இஸ்ரேலியர்களால் பலஸ்தீனில் மேற்கொள்ளப்படும் அட்டூலியங்கள் குறித்த கருத்துக்கள் அடங்கிய பேஸ்புக் பக்கங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் குறித்த பக்கங்கள் பேஸ்புக் இணையதளத்திலிருந்து அகற்றப்படாததைக் கண்டித்து இஸ்ரேலில் போராட்டம் நடத்தப்பட்டது. இதன்போதே குறித்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் பேஸ்புக் தலைமையகத்தை அடித்து நொறுக்கியுள்ளனர்.