இவ்வருட முடிவுக்குள் கல்வி நிருவாக சேவைக்கு 852 பேர் நியமனம்- கல்வி அமைச்சு

இவ்வருடம் முடிவதற்கு முன்னர் கல்வி நிருவாக சேவைக்கு தகுதியான 852 பேரை இணைத்துக் கொள்ள கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

திறந்த போட்டிப் பரீட்சைக்கு தோற்றிய விண்ணப்பதாரிகளிலிருந்து 219 பேரும், மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கு தோற்றியவர்களில் 515 பேரும், சிரேஷ்ட மற்றும் தகுதி அடிப்படையில் 118 பேரும் இவ்வாறு தெரிவு செய்யப்படவுள்ளனர்.

திறந்த போட்டிப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு நேர்முகப் பரீட்சை நடாத்தப்படவுள்ளதாகவும் அமைச்சு மேலும் கூறியுள்ளது.

Related Posts