இவன் உருப்படவே மாட்டான்! ரோபோ சங்கரைத் திட்டிய பெண்கள்

இவன் எல்லாம் உருப்படவே மாட்டான் என மதுரைக்கார பெண்கள் தனக்கு சாபமிட்டதாக நடிகர் ரோபோ சங்கர் தெரிவித்துள்ளார்.

robo-sankar

சாஹசம் பட விழாவில் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தான் சிறுவனாக இருக்கையில் நடந்த சம்பவத்தை பற்றி சுவாரஸ்யமாக கூறினார்.

அவர் தெரிவித்தாவது, “நான் சிறுவனாக இருக்கையில் என் அம்மாவுடன் சேர்ந்து மதுரையில் உள்ள சிந்தாமணி தியேட்டருக்கு படம் பார்க்க செல்வேன். ஒரு முறை நானும், என் அம்மாவும் வைகாசி பொறந்தாச்சு படம் பார்க்க சென்றோம்.

நான் என் அம்மாவுடன் சேர்ந்து பெண்கள் பகுதியில் அமர்ந்து படம் பார்த்தேன். பாடல் காட்சிகள் வந்தபோது பெஞ்சில் ஏறி நின்று கொண்டி விசில் அடித்து ஆட்டம் போட்டேன். அதை பார்த்த பெண்கள் முளைச்சு மூணு இலை விடலை.அதற்குள் எப்படி தறுதலையாக இருக்கிறது. இது எல்லாம் உருப்படவா என்று சபித்தார்கள். இதை பார்த்த என் அம்மா என் மானத்தை வாங்குகிறானே என்று கூறி என்னை அங்கிருந்து சென்று ஆண் பகுதியில் உட்காரந்து படம் பார்க்குமாறு விரட்டி விட்டார்கள் என்றார்.

Related Posts