சில தினங்களுக்கு முன்பாக புங்குடுதீவில் பாடசாலை மாணவி ஒருவர் ஊரில் உள்ள காமுகர்களால் கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்படட சம்பவத்திற்கு கண்டணம் செலுத்தும் முகமாக சமூகவலைத்தளம் ஊடாக ஒழுங்குபடுத்தப்பட்ட வன்புணர்வுகளுக்கெதிராக இளையவர்கள் போராட்டம் 17.5.2015 காலை 11 மணியளவில் நல்லுார் கந்தசுவாமி கோவில் முன்பாக நடைபெற்றிருந்தது.
இது தொடர்பாக பங்குகொண்டிருந்த ஒருவர் தனது படம் உள்ள பகுதியினை முகப்புத்தகத்தில் பகிர்ந்திருந்தார்.அந்தப்பதிவுக்கு கனடா தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவரும் கனடா நக்கீரன் என அறியப்பட்டவருமான வேலுப்பிள்ளை தங்கவேலு என்பவர் கருத்திடுகையில் ”ஐந்து பேர்தானே நிற்கிறீர்கள்?” என்று கருத்திட்டு ஏளனப்படு்த்தியிருக்கின்றார்.
குறித்த படத்தில் நிறைய இளையவர்கள் நின்றிருந்தமையும் அந்த ப்படத்துடன் குறித்த நிகழ்வில் கலந்த கொண்டிருந்த இளையவர்களின் படங்கள் அடங்கிய செய்தி தொடுப்பு இடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.அவர் நீண்ட காலமாக தமிழ்த்தேசியத்திற்கு ஆதரவானவராக தன்னை காட்டிக்கொள்ளும் அதேவேளை இளையவர்களின் பொது விடயம் ஒன்றிற்கான முயற்சியை ஏளனப்படுத்தியிருப்பது அவரது உண்மையான உணர்வினை வெளிக்காட்டியிருப்பதாகவே படுகின்றது .
இப்படியான போலி தேசியவாதிகள் குறித்த தமிழ் மக்கள் அவதானமாக இருக்கவேண்டியதின் அவசியத்தினை இது எடுத்து க்காட்டுகின்றது.