இளையராஜா இசையில் பாட்டுப் பாடிய கமல்

முத்துராமலிங்கம் படத்தில் இளையராஜா இசையில் கமல் பாடிய, “தெக்கத்தி சிங்கமடா..” பாடல் டீசர் வெளியாகியுள்ளது.

குளோபல் மீடியா ஒர்க்ஸ் சார்பில் டி.விஜய் பிரகாஷ் தயாரிக்கும் புதிய படம் முத்துராமலிங்கம். ராஜதுரை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இப்படத்தில் நெப்போலியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, கவுதம் கார்த்திக் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்தும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். படத்தில் ஒரு பாடலை பஞ்சு அருணாச்சலம் எழுதியுள்ளார்.

‘தெக்கத்தி சிங்கமடா, முத்துராமலிங்கமடா, சுத்த பசும் பொன் தங்கமடா’ எனத் தொடங்கும் இப்பாடலை கமல் பாடியுள்ளார். தற்போது இப்பாடலின் டீசர் வெளியாகியுள்ளது.

நடிகராக மட்டுமின்றி அவ்வப்போது பாடகராகவும் தனது திறமையை நிரூபித்து வருகிறார் கமல். அந்தவகையில் இப்பாடலும் அவரது பேர் சொல்லும் விதமாக அமைந்துள்ளது.

அதுமட்டுமின்றி, சுமார் 21 ஆண்டுகளுக்குப்பிறகு பஞ்சு அருணாச்சலம் வரிகளுக்கு இளையராஜா இசை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts