பாடசாலை கல்வியை நிறைவு செய்த இளைஞர் யுவதிகளின் தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை கல்வித் துறைகளுக்காக மாதாந்தம் 5000 ரூபா வரையான கொடுப்பனவு பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக குருணாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமது அரசாங்கத்தினால் ஆரம்பித்து இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றிலலேயே இதனைத் தெரிவித்தார்.