இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கும் திட்டத்தை சீர்குலைக்க துரோகிகள் முயற்சி

இந்த நாட்டில் இளைஞர் யுவதிகளுக்கு பத்து இலட்சம் தொழில் வாய்ப்புக்களை வழங்கும் வேலைத் திட்டத்தை சில துரோகிகள் குழு சீர்குலைக்க முயற்சிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஹம்பாந்தோட்டையில் வைத்து கூறினார்.

தனது தேவை நாட்டில் மூன்று வேளை சாப்பாட்டிற்கு வசதியற்று இருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த தொழிலை உருவாக்குவது என்றும், அந்த வேலைத் திட்டத்தை சீர்குலைக்க எவருக்கும் இடமளிப்பதில்லை என்றும் பிரதமர் கூறினார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஹம்பாந்தோட்டையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேலைத்திட்டங்களை பார்வையிட கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த வேளை அங்கு ஊடகவியலாளர்களிடம் கருத்து வௌியிடும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட உள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஜீ.எம்.ஓ. அமைப்பு தடைகளை ஏற்படுத்துவதாறகவும் அந்த அமைப்பு தமது இணையத்தள பக்கத்தில் தவறான கருத்துக்களை பரப்புவதாகவும் பிரதமர் கூறினார்.

இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுப்பதற்கு இவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதன் நோக்கம், நாட்டினுள் குழப்ப நிலையை தோற்றுவித்து மீண்டும் அதிகாரத்திற்கு வரும் போராட்டத்திற்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கும் வேலைத் திட்டம் தடையாக இருக்கும் என்று இவர்கள் எண்ணுவதன் காரணமாகவே என்று பிரதமர் கூறினார்.

எவ்வாறாயினும் பாராளுமன்றத்தில் அதிக பலத்துடன் இருக்கும் தற்போதைய அரசு ஆரம்பித்த வேலைத் திட்டங்களை சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என்றும் பிரதமர் கூறினார்.

Related Posts