இளைஞர் யுவதிகளுக்கு சிறந்ததொரு சந்தர்ப்பம் உருவாக்கப்பட்டுள்ளது!

நாட்டில் இளைஞர் யுவதிகளுக்கு எதிர்பார்ப்புடன் கூடிய சந்தர்ப்பம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் இந்நாட்டின் பல்கலைக்கழகங்களில் தொழிலுக்கேற்ப தொழிற் கல்வி ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

வரவுசெலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதம் நேற்று (23) பாராளுமன்றில் இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நாடு என்ற வகையில் வரவுசெலவில் உள்ள விடயங்கள், நபர்கள், சமூக பிரிவுகள், துறைகள் என அனைத்துக்கும் தாக்கம் செலுத்தும் வகையில் இம்முறை வரவுசெலவு தயாரிக்கப்பட்டுள்ளது.

சிலர் இது தொடர்பில் கடுமையாக வாதம் செய்தாலும் கூட நாடு என்ற வகையில் ஒரு இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. எங்களுக்கு பிரச்சினை ஒன்று இருந்தது. இளந்தலைமுறையினர் மத்தியில் தொழிலின்மை பாரிய பிரச்சினையாக காணப்பட்டது. இவ்வரவு செலவானது அரசியல்வாதிகள் பின்னால் செல்லாத இந்நாட்டு இளைஞர் யுவதிகள் எதிர்பார்ப்புடன் கூடிய வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

அரச உத்தியோகத்தையே எதிர்பார்க்கின்றனர். துப்புரவு தொழிலாக இருந்தாலும் கூட பரவாயில்லை. இதற்கு ஓய்வூதியமே பிரதான காரணம். எமது நாட்டின் உல்லாசப் பிரயாணத்துறை முறையாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். உல்லாசப் பிரயாணத்துறையை அபிவிருத்தி செய்ய முடியும். பிள்ளைகளை இலவச கல்வியினூடாக பலப்படுத்தும் அதே நேரம் நாட்டின் பல்கலைக்கழகங்களில் தேவையான தொழில்களுக்கேற்ற கல்வியை வழங்கவேண்டும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related Posts