நான்காவது இளைஞர் பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் 18ம் திகதி இடம்பெற உள்ளது.
காலை 7.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை நாடு பூராகவும் 661 தேர்தல் மத்திய நிலையங்களில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் தெரிவிக்கின்றது.
தேர்தலுக்காக 916 இளைஞர் யுவதிகள் வேட்பு மனு தாக்கல் செய்திருப்பதுடன், வாக்களிப்பதற்காக 340,000 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இளைஞர் பாராளுமன்றத்தின் 225 ஆசனங்களுக்கு 160 உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட உள்ளனர்.
பல்கலைக்கழக இளைஞர்கள் யுவதிகள், சட்டக் கல்லூரி மாணவ மாணவிகள், பாடசாலை மாணவத் தலைவர்கள், வேறு இளைஞர் அமைப்பு உறுப்பினர்கள், பல்வேறு திறன்களை கொண்ட வேறு இளைஞர் யுவதிகள் போன்றோர் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர் என்று தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் தெரிவிக்கின்றது.