இளைஞர்கள் போராட்டத்துக்கு விஜய் நேரில் ஆதரவு

மெரினாவில் நடைபெற்று வரும் இளைஞர்கள் போராட்டத்துக்கு விஜய் நேரில் ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்று மெரினாவில் இளைஞர்கள் ஒன்றிணைந்து நடத்தி வரும் போராட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் இப்போராட்டத்துக்கு தங்களுடைய முழு ஆதரவையும் தெரிவித்து வருகிறார்கள்.

முதலில் விஜய் தனது ஆதரவை வீடியோ பதிவு ஒன்றின் மூலம் வெளிப்படுத்தினார். நேற்று நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற மவுனப் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொள்வார் என தகவல்கள் வெளியாகின. ஆனால், விஜய் பங்கெடுத்துக் கொள்ளவில்லை.

அதற்கு பதிலாக இன்று (ஜனவரி 21) அதிகாலை 2 மணியளவில் மெரினாவில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்களுக்கு நேரில் ஆதரவு தந்துள்ளார். முகத்தில் துணி ஒன்றை கட்டிக் கொண்டு சுமார் 3 மணி நேரம் மாணவர்களோடு அமர்ந்திருந்தார்.

மெரினா போராட்டத்துக்கு நேரில் விஜய் ஆதரவு தெரிவித்ததால், பலரும் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள். மேலும், விஜய் அடையாளம் கண்டுகொண்டதால் அங்கிருந்து உடனடியாக கிளம்பினார்.

Related Posts