இளவாளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விளான் சந்தி அராலி – தெல்லிப்பழை வீதியில் கால்பந்தாட்ட நடுவர் ஒருவர் வாள்வெட்டுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளார்.
அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும்.
நேற்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற இவ் சம்பவத்தில் உரும்பிராயைச் சேர்ந்த ஜெயக்குமார் (வயது 58 ) என்பவரே வாள்வெட்டுக்குள்ளாகிப் படுகாயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் அடங்கிய வாள்வெட்டுக் கும்பலே வீதியால் பயணித்த நடுவர் மீது வெட்டிவிட்டு தப்பித்து சென்றுள்ளது இவ்.சம்பவம் தொடர்பில் இளவாளைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் கூறினர்.