இளவாலை, சீனிப்பந்தல் பிரதேசத்தில் தனியார் காணியொன்றிலிருந்து எலும்புக்கூடொன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 4.30 மணியளவில் இந்த எலும்புக்கூடு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மலசலகூடம் அமைப்பதற்கான குழியொன்று வெட்டும்போதே இந்த எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.