வெளிநாட்டு செல்வதற்கான வீசா கிடைத்ததை நண்பர்களுக்கு சொல்லச் சென்ற இளம் குடும்பஸ்தர் காணாமல் போயுள்ளதாக யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது
யாழ்ப்பாணம் இளவாலை வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடானது இளவாலைப் பொலிஸ் நிலையத்திலும் யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது
வெளிநாடு செல்ல இருந்த இவரை யாரவது பணத்திற்காக கடத்தியிருக்கக் கூடும் என தாம் சந்தேகிப்பதாக காணாமல் போனவரின் மனைவி தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இம் முறைப்பாட்டை அடுத்து இளவாலைப் பொலிஸார் காணாமல் போனவரைத் தேடி வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.