Ad Widget

இளவயதினர் போதைக்கு அடிமையாகுதல் அதிகரிப்பு

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இளவயதினர் போதைப்பொருளுக்கு அடிமையாகும் நிலையானது நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

21 வயதுக்குட்பட்டவர்களே, அதிகளவில் போதைப்பொருள் பாவனை, மதுப்பழக்கம் புகைத்தல் ஆகியவற்றுக்கு அடிமையாகியுள்ளனர்.

கடந்த கால யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வையடுத்து கிளிநொச்சி மற்றும் முல்லைத்;தீவு மாவட்டங்களில் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத மதுபான உற்பத்தி, விற்பனைகள் என்பன சிறுவர்கள் மற்றும் இளவயதினர் மட்டத்தை மதுப்பழக்கத்துக்குட்படுத்துவதற்கான பிரதான காரணமாக அமைகின்றது.

இதனைவிட வெளிமாவட்டங்களிலிருந்து சட்டவிரோதமாக கொண்டு வரப்படும் போதைப்பொருட்கள் சிறுவர்களை மையப்படுத்தி விற்பனை செய்யப்படுகின்றன.

கிளிநொச்சி பாரதிபுரம் மற்றும் கிளிநொச்சி நகர் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனைக்கு சிறுவர்கள் பயன்படுத்தப்பட்டு, அந்தச் சிறுவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன்நிறுத்தப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இதனைவிட சட்டவிரோத கசிப்பு விற்பனைகளுக்கு சிறுவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.

குறிப்பிட்ட சில குடும்பங்கள் தங்களின் குடும்ப வருமானத்துக்கான சிறுவர்களை பயன்படுத்தியும் குறித்த குடும்பங்களும் சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் விற்பனைகளில் ஈடுபட்டு வருவதானது சிறுவர்கள் மற்றும் இள வயதினரை போதைப்பொருள் மதுபாவனை புகைத்தல் போன்ற செயற்பாடுகளுக்கு தூண்டப்படுகின்றனர் எனவும் தெரிவித்தனர்.

Related Posts