இளம் பெண்ணை தாக்கி தங்க நகைகள் அபகரிப்பு

Theft_Plane_Sympol-robberyஅயல் வீட்டுப் பெண் பொல்லினால் தாக்கியதால் மயக்கமடைந்த இளம் பெண்ணிடம் இருந்த சுமார் இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் திருடப்பட்ட சம்பவம் ஏழாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ஏழாலைப் பகுதியில் தனது வீட்டுக்கு அயலில் உள்ள வீட்டில் இந்தத் துணிகரத் திருட்டை மேற்கொண்டுள்ளார்.

வீட்டில் தனது மகளைச் சமைக்கும்படி கூறிவிட்டு தாயார் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார்.

இதன் போது அங்கு வந்த அயல் வீட்டுப் பெண் வீட்டில் சமைத்துக் கொண்டிருந்த பெண்ணைத் தலையில் பொல்லினால் தாக்கியுள்ளார். இதன் போது அந்தப் பெண் மயங்கி விழுந்துள்ளார்.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவரது கழுத்தில் இருந்த சங்கிலி, காதில் இருந்த தோடு ஆகியவற்றை அபகரித்துக் கொண்டு அங்கிருந்து மறைந்து விட்டார்.

தாயார் வீடு திரும்பிய போதே இந்தத் திருட்டுக் குறித்துத் தெரியவந்தது. இதனையடுத்து இது தொடர்பில் சுன்னாகம் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.

Related Posts