இளமையாக மாற அஜீத்துக்கு கெடு : தல தலை கருப்பாகிறது

இளமையான தோற்றத்துக்கு மாற அஜீத்துக்கு ஒரு வாரம் அவகாசம் தந்திருக்கிறார் கவுதம் மேனன். பெப்பர் சால்ட் என்ற கறுப்பு வெள்ளை தலைமுடியுடன் வீரம், மங்காத்தா படங்களில் நடித்த அஜீத் அடுத்து கவுதம் மேனன் இயக்கும் படத்திலும் அதேதோற்றத்தில் நடிக்கிறார்.

ajith-new-lloook

இப்படத்தில் அஜீத் இரட்டை வேடம் ஏற்பதால் இளமை ததும்பும் வேடத்திலும் நடிக்கிறார். ஏற்கனவே பெப்பர்சால்ட் தோற்றத்துடன் கூடிய காட்சிகள் பெரும்பகுதி படமாகிவிட்டது. அடுத்து திரிஷாவுடன் நடிக்கும் காட்சிகளுக்காக இளமை ததும்பும் நாயகனாக மாறுகிறார் அஜீத்.

இதற்காக அவருக்கு இயக்குனர் ஒரு வாரம் அவகாசம் கொடுத்திருக்கிறார். அதற்குள் முகத்தை சவரம் செய்து, நரைத்த முடிக்கு கருப்பு டை அடித்து பளபள தோற்றத்துக்கு மாறிவருகிறார் அஜீத். இளமையான தோற்றத்தில் அஜீத்தை பார்த்து வருடக்கணக்கில் ஆகிவிட்ட ரசிகர்களுக்கு இந்த தோற்றம் விருந்தாக இருக்கும் என்று பட குழுவினர் தெரிவிக்கின்றனர்.

Related Posts