இளஞ்சிவப்பு முழு நிலா இன்று வானில் தோன்றும்!

இளஞ்சிவப்பு முழு நிலவு (Super Pink Moon ) வானில் இன்று தோன்கிறது. 2020-ம் ஆண்டில் இதுவே மிகப்பெரிய, பிரகாசமான முழு நிலவாக இருக்கும்.

நிலவு, முழு நிலவை (பௌர்ணமி) அடையும்போதும், பூமிக்கு மிக அருகில் (perigee) வரும்போதும் வானில் ‘சுப்பர் மூன்’ தோன்றுகிறது.

இந்நிலையில் இந்த வசந்த காலத்தில் முதல் முழு நிலவாக சுப்பர் பிங்க் நிலா தோன்றும் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது இளஞ்சிவப்பு நிலா என அழைக்கப்பட்டாலும், அது அந்த நிறத்தில் இருக்காது. வட அமெரிக்காவில் ஓர் இளம் சிவப்பு மலர் கொத்துக் கொத்தாக பூப்பதால், இந்த சுப்பர் மூனுக்கு ‘சுப்பர் பிங்க் மூன்’ என பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

இலங்கையில் இதன் பிரகாசம் உச்ச அளவை எட்டுகிறது. நள்ளிரவில் ரசிக்கலாம். அப்போது நிலவு, பூமிக்கு நெருக்கமாக 3,56,907 கிலோ மீற்றர் தொலைவுக்கு வருகிறது.

Related Posts