உலக பார்வை தினத்தை முன்னிட்டு யாழ். அரிமாக்கழகத்தின் அனுசரணையுடனும் யாழ்.போதனா வைத்தியசாலையின் ஒத்துழைப்புடனும், யாழ்.ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனம் பார்வைக் குறைபாடுடைய தனது பயனாளிகளுக்கு கண் பரிசோதனைகளை மேற்கொண்டு இலவசமாக மூக்குக் கண்ணாடி வழங்கவுள்ளது.
மேற்படி சிகிச்சை முகாமில் பங்கு கொண்டு பயன்பெற விரும்பும் யாழ்.ஜெய்ப்பூர் நிறுவனப் பயனாளிகள் எமது நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு நாளை 2ஆம் திகதிக்கு முன்னர் தமது பெயர் விபரங்களைப் பதிவு செய்யும்படி யாழ்.ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவன பொருளாளர் வைத்தியர் திருமதி எஸ்.தெய்வேந்திரன் அறிவித்துள்ளார்.
உலக பார்வை தினம் எதிர்வரும் 8ஆம் திகதி வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.