இலங்கை கிட்டார் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்.குடாநாட்டில் கிட்டார் இசைக்கருவி பயிற்சி பெற விரும்புவோருக்கு உரிய பயிற்சிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் பயிற்சி பெறும் இசைக்கலைஞர்கள் தேசிய மற்றும் சர்வதேச மட்ட நிகழ்வுகளில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். ஏற்கனவே கிட்டார் பயிற்சி பெற்றவர்களும் இத்திட்டத்தில் இணைந்து கொள்ள முடியும்.
இப்பயிற்சிக்கென கலைஞர்கள் தெரிவு எதிர்வரும் 29 ம் திகதி காலை 10.00 மணிக்கு யாழ்.நூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெறும்.
இதில் இணைந்து கொள்ள விரும்புவோர் 0777707332 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.