இலவசமாக பொருத்தப்படும் கண்வில்லைகள்

கண்ணில் உள்ள வெள்ளை படர்தலை நீக்கும் சிகிச்சைக்காக வரும் ஒவ்வொரு நோயாளர்களுக்கும் உயர்த்தரத்திலான கண் வில்லைகள் இலவசமான முறையில் பொருத்தப்படுவதாக தேசிய கண் வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் டொக்டர் முஹம்மட் ரிஷாப் தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நாளாந்தம் இரண்டாயிரத்திற்கும், மூவாயிரத்திற்கும் இடைப்பட்ட நோயாளர்கள் இவ்வாறான சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். 15 வைத்திய நிபுணர்கள் சத்திரசிகிச்சையை மேற்கொள்கிறார்கள்.

உயர்தரத்திலான கண் வில்லைகளுக்கென வருடாந்தம் 100 கோடி ரூபாவை வைத்தியசாலை செலவிடுகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.

Related Posts