சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இலத்திரனியல் மற்றும் மிக்சாதனக் கழிவுப் பொருட்களை பாதுகாப்பாக அழிப்பதற்காக மத்திய சுற்றாடல் அதிகார சபை ஈ- கழிவு தேசிய முகாமைத்துவ வாரத்தை பிரகடனப்படுத்தியுள்ளது.
நாடளாவிய ரீதியில் நாளை 27ம் திகதி செவ்வாய்க்கிழமை தொடக்கம் 2ம் திகதி திங்கட்கிழமை வரை இந்த வாரம் கடைப்பிடிக்கப்படும்.
இதனையொட்டி பொதுமக்கள் தங்களின் பாவனைக் காலம் முடிவடைந்த பழுது பார்க்க முடியாத இலத்திரனியல், மின்சாதனப் பொருட்களை, கணினி, கைபேசிகள், இறுவட்டுக்கள், புளோரசன் மின்குமிழ்கள், மின்கலங்கள், அச்சுமை கழிவுகள் என்பவற்றை வடக்கு மாகாணத்தின் சகல மாவட்டங்களிலும் சேகரிக்கும் இடங்களில் காலை 8.30 மணி தொடக்கம் பி.ப 3 மணி வரை ஒப்படைக்க முடியும்.
மின்கழிவுப் பொருட்கள் சேகரிக்கும் இடங்களின் விபரம் வருமாறு
மே 28ம் திகதி -கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபை.
மே 29ம் திகதி – முல்லைத்தீவு, கரைத்துறைப்பற்று பிரதேச சபை, வவுனியா நகரசபை மைதானம்.
மே 30 திகதி – மன்னார் நகரசபை பழைய நூழகக் கட்டிடம்
ஜீன் 2ம் திகதி – யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலுக்கு அண்மையாக றியோ கிறீம் ஹவுஸ் முன்பாக அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் ஒப்படைக்கலாம்.