இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் டில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் முன்னாள் முப்படைத் தளபதிகள் சிலரை நீதிமன்றத்துக்கு அழைத்தமை தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் சில கருத்துக்களை வௌியிட்டிருந்தார்.
ஜனாதிபதியின் குறித்த உரையே டில்ருக்ஷியின் இராஜினாமாவுக்கு காரணமாக இருக்கலாம் என, நம்பத் தகுந்த வட்டாரங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.