இலங்கை 5 விக்கட்டுகளால் வெற்றி

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 ​போட்டியில் இலங்கை அணி 5 விக்கட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

குறித்த போட்டி அவுஸ்திரேலியா, மெல்பர்ன் கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்றது.

நேற்றய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இந்த நிலையில் 169 என்ற வெற்றி இலக்கை நோக்கி இலங்கை பதிலளித்தாடியது.

இதன்படி, 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுகளை இழந்து 172 ஓட்டங்களை இலங்கை அணி பெற்றது.

துடுப்பாட்டத்தில் அசேல குணரட்ன 52 ஓட்டங்களையும், தில்ஸான் முனவீர 44 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

Related Posts