இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி நடாத்தும் இயல் இசை நாடக விழா

Bharatanatyam_Dancer_by_daceஇலங்கை வேந்தன் கலைக்கல்லுாரி நடாத்தும் இயல் இசை நாடக விழா நாளை செவ்வாய்க்கிழமை முதல் ஜந்து தினங்கள்(13- 17)  நீராவியடி இலங்கை வேந்தன் கலைக்கல்லுாரியில் இடம்பெறவள்ளது. விரிவரையாளர் ச.லலீசன் தலைமையில் நடைபெறவள்ள இந்த நிகழ்வுகளில் முதல் நாள் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வடமாகாணசபை அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் கலந்து கொள்வார்.

இதில் சைவ வித்தியா விருத்திச் சங்க சைவச் சிறுவர் இல்ல மாணவர்களின் வரரவேற்பு நடனமும் யோகர்சுவாமி நற்சிந்தனை இசைப்போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதற்பரிசு பெற்ற இசையரங்கமும்
நா.மதியழகன் குழுவினர் வழங்கும் ”இசையும் மனிதனும்” என்ற வில்லிசையும் ஏழிசை மிருதங்க நர்த்தனாலய மாணவிகள் வழங்கும் நாட்டிய அர்ப்பணமும் புதத்தம்பி இசைநாடகமும் இடம்பெறவுள்ளன.

நாளை மறுதினம் 14 ஆம் திகதி இடம்பெறும் இரண்டாம் நாள் நிகழ்வுக்குப் பிரதமவிருந்தினராக யாழ் பழ்கலைக்கழக முன்னாள் தமிழ்த் துறைத்தலைவர் பேராசிரியர் சி.சிவலிங்கராசா கலந்து கொள்வார்.

அன்றையதினம் இ.நக்கீரன் குழுவினரின் வேணுகான இசை நிகழ்வும், புஸ்பாலய நடன சபா மாணவிகள் வழங்கும் அபிநய சதங்கையும் இடம்பெறவுள்ளதுடன் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத் தலைவரும் யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடாதிபதி பேராசிரியர் ரி.வேல்நம்பி தலைமையில் ”பாரம்பரிய கலைகளின் இருப்பிற்கு நவீனத்துவம் சாதகமானதா பாதகமானதா” என்ற தலைப்பிலான பட்டிமன்றம் இடம்பெறும்.

தொடர்ந்து பாஷையுர் சென் அன்ரனிஸ் கலைக்கழகம் வழங்கும் வீரபாண்டிய கட்டப்பொம்மன்” என்ற தென்மோடி நாட்டுக்கூத்தும் இடம்பெறும்.

Related Posts