தடைசெய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான லக்ஷர் இ ஜாங்வி அமைப்பின் தலைவர் மாலிக் இஷாக் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
கடந்த வாரம் மாலிக் இஷாக் மற்றும் அவரது இரு மகன்களும் கைதுசெய்யப்பட்டனர்.
இவர்களை பஞ்சாப் மாகாணத்திற்கு ஆயுதங்களை மீட்கும் பொருட்டு அழைத்துச் சென்று பின் செவ்வாய்க்கிழமை திரும்பி வருகையில், ஆயுதம் தாங்கிய குழுவினர் அவர்கள் பயணித்த வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும் இந்த மோதலில் இஷாக், அவரது இரு மகன்கள் மற்றும் 11 பேரும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை பாதுகாப்புத் தரப்பிலும் ஒரு பொலிஸ் அதிகாரி உயிரழந்ததோடு மேலும் ஆறு பொலிஸார் காயமடைந்துள்ளனர்.
இஷாக், சியா முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தும் லக்ஷர் இ ஜாங்வி என்ற தடைசெய்யப்பட்ட இயக்கத்தின் தலைவர் என்பதோடு, இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது பாகிஸ்தானில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தின் சூத்திரதாரி என கூறப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.