இலங்கை வீரர்களுக்கு சென்னையில் விளையாட முடியாத சூழ்நிலை

இம்முறை ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சென்னையில் நடைபெறும் லீக் ஆட்டங்களில் இலங்கை வீரர்கள் களம் காண முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

IPL-8

இந்தியாவில் ஆண்டு தோறும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இதன்படி நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் 8ம் திகதி முதல் தொடங்கி மே 24ம் திகதி வரை நடைபெறவுள்ளன.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகள் மோதும் லீக் ஆட்டம் 9ம் திகதி சென்னையில் இடம்பெறவுள்ளது.

இந்தநிலையில், ஈழத்த தமிழர் பிரச்சினை உள்ளிட்ட காரணங்களுக்காக தமிழக அரசாங்கம் அனைத்து இலங்கை வீரர்களுக்கும் தமிழகத்தில் விளையாட கடந்த இரண்டு சீசன்களிலும் தடைவிதித்திருந்தது.

மேலும் இம்முறையும் இலங்கை வீரர்கள் எவரும் தமிழகத்தில் விளையாட முடியாது என, தமிழக கிரிக்கெட் சங்கத்தின் பொதுச் செயலாளர் காசி விஸ்வனாதன் உறுதி செய்துள்ளார்.

இந்த தகவலை ஐபிஎல் நிர்வாக குழுவுக்கும் அறிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எனினும் மெத்தியூஸ் சென்னையில் விளையாடும் போட்டியில் அனுமதிக்கப்படுவாரா என்பது குறித்து இன்னும் ஐபில் நிர்வாகத் தரப்பினரிடம் இருந்து எந்தவொரு தகவலும் கிடைக்கப்பெறவில்லை என டெல்லி டெயாடேவில்ஸ் அணி குறிப்பிட்டுள்ளது.

இதனால் டெல்லி அணியில் விளையாடும் முக்கிய வீரரான இலங்கை அணித் தலைவர் மெத்யூஸ் இந்த ஆட்டத்தில் பங்கேற்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

Related Posts