இலங்கை வீரரை காப்பாற்றிய தோனி? : அதிர்ச்சியில் இந்திய அணி

இந்திய அணியின் முன்னாள் தலைவரும் தலை சிறந்த அதிரடி, நிதான துடுப்பாட்டம் மட்டுமல்லாது சிறப்பான விக்கெட் காப்பாளருமான தோனி விட்ட தவறு குறித்து தற்போது அதிகமாக பேசப்பட்டு வருகின்றது.

இலங்கைக்கு எதிரான 3 ஆவது ஒரு நாள் போட்டியில் இலங்கை வீரர் சந்திமாலை காப்பாற்றும் செயலில் தோனி ஈடுபட்டாரா என்ற விமர்சனங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

குறித்த போட்டியில் 97 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் சந்திமால் இடது திசையில் பந்தை திருப்பி விட்டு ஓட்டங்களை பெற முயற்சி செய்தார்.

அத்திசையில் களத்தடுப்பில் இருந்த விராட் அதிவேகமாக பந்தைத் தடுத்து விக்கெட் காப்பாளரான தோனிக்கு எறிந்துள்ளார்.

விக்கெட்டுகளுக்கு அருகில் இருந்த தோனி அதி வேகமாக ஸ்டம்ப் செய்தார். எனினும் பந்து தோனியின் கைவிட்டு கீழே விழுந்திருந்த போதும் வெறும் கைகளால் தோனி ஸ்டம்ப் செய்தார்.

இதன் காரணமாக முக்கியமான விக்கெட்டாக கருதிய சந்திமாலின் விக்கெட்டை கைப்பற்ற இந்தியாவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

தோனியின் இந்த தவறு தலைவர் விராட் கோஹ்லி உட்பட ஏனைய வீரர்களுக்கு மட்டுமல்லாது ரசிகர்களுக்கும் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சிறந்த விக்கெட் காப்பாளரான தோனி இதுவரையில் இவ்வாறு தவறு செய்தது இல்லை எனவும், வரலாற்றில் இந்தச் சம்பவம் பதியப்பட வேண்டும் எனவும் விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

எனினும், குறித்த போட்டியில் தடுமாறிப் போய் இருந்த இந்திய அணியை, தோனி நிதானமான துடுப்பெடுத்தாட்டம் மூலம் வெற்றி பெறச் செய்து விட்ட தவறையும் சரி செய்துவிட்டார்.

Related Posts