இலங்கை விவகாரம் : வைகோ கைது

மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் அமெரிக்கா தாக்கல் செய்துள்ள அறிக்கையை எதிர்ப்பு தெரிவித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைகோ உள்ளிட்டவர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக இந்திய செய்தி தெரிவிக்கின்றது.

இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக பொதுநலவாய அமையத்தின் நீதிபதிகள் கொண்ட விசாரணையே போதும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைய கூட்டத்தில், அமெரிக்கா அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

இந்த அறிக்கை, முழுக்க, முழுக்க, இலங்கைக்கு ஆதரவாகவே உள்ளது. இந்த அமெரிக்க தீர்மானத்தை கண்டித்து, சென்னை எழும்பூர் பகுதியில், வைகோ தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போதே, வைகோ உள்ளிட்டோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Related Posts