இவ்வாண்டு ஜூலை மாதத்தில், முழுமையான கிரிக்கெட் தொடரொன்றுக்காக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இலங்கைக்கு வரவுள்ளது. 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், 2 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் அடங்கிய தொடருக்காகவே, அவுஸ்திரேலிய அணி இலங்கைக்கு வரவுள்ளது. இந்தத் தொடர், ஜூலை 26ஆம் திகதி ஆரம்பித்து, செப்டெம்பர் 9ஆம் திகதி நிறைவடையவுள்ளது.
அவுஸ்திரேலிய அணி இறுதியாக, 2011ஆம் ஆண்டே, டெஸ்ட் தொடரொன்றுக்காக இலங்கைக்கு வந்திருந்த நிலையில், 5 ஆண்டுகளின் பின்னர் இலங்கைக்கு வரவுள்ளது. அண்மைக்காலமாக சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்திவரும் அவுஸ்திரேலிய அணி, உலக டெஸ்ட் தரப்படுத்தலில் முதலாமிடத்தில் காணப்படுவதோடு, இலங்கை அணி தடுமாறி வருகின்றது.
கடந்த முறை அவுஸ்திரேலிய அணி இலங்கைக்கு வந்தபோது, நேதன் லையன், தனது டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார். இம்முறை, உலகின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இலங்கைக்கு வரவுள்ளார்.
போட்டி அட்டவணை:
முதலாவது டெஸ்ட்: ஜூலை 26-30 – பல்லேகெல
இரண்டாவது டெஸ்ட்: ஓகஸ்ட் 4-8 – காலி
மூன்றாவது டெஸ்ட்: ஓகஸ்ட் 13-17 – கொழும்பு
முதலாவது ஒ.நா.ச.போ: ஓகஸ்ட் 21 – கொழும்பு
இரண்டாவது ஒ.நா.ச.போ: ஓகஸ்ட் 24 – கொழும்பு
மூன்றாவது ஒ.நா.ச.போ: ஓகஸ்ட் 28 – தம்புள்ளை
நான்காவது ஒ.நா.ச.போ: ஓகஸ்ட் 31 – தம்புள்ளை
ஐந்தாவது ஒ.நா.ச.போ: செப்டெம்பர் 4 – கண்டி
முதலாவது இருபதுக்கு-20 ச.போ: செப்டெம்பர் 6 – கண்டி
இரண்டாவது இருபதுக்கு-20 ச.போ: செப்டெம்பர் 9 – கொழும்பு