இலங்கை வரலாற்றில் இப்படியொரு ஜனாதிபதியா? அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய ஜனாதிபதி

யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால, யாழ்,வலி வடக்கு மக்கள் தங்கியிருக்கும் கோணப்புலம் நலன்புரி முகாமுக்கு சென்றிருந்தார். அமைந்துள்ள இடம்பெயர்ந்தோர் முகாமுக்குச் சென்று அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

ஜனாதிபதி, மக்களின் குடிசைகளுக்குள் சென்று உட்கார்ந்து நலம் விசாரித்ததுடன், அவர்கள் சமைத்து உண்ணும் உணவினையும் பார்வையிட்டமை அனைத்து மக்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சிறுவர்கள் உட்பட அனைத்து தரப்பினரிடமும் ஜனாதிபதி இங்கு மிகவும் மகிழ்ச்சியுடன் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது ஜனாதிபதியிடம் 25 வருடங்களாக தாம் சொந்த நிலங்களை விட்டு வெளியேறி அவலமான வாழ்க்கை வாழ்ந்து வருவதாக தெரித்த மக்கள், தாம் எந்தவித உதவிகளையும் எதிர்பார்க்கவில்லை. எனவே தம்மை சொந்த நிலங்களில் மீள்குடியேற்றுங்கள் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையிலேயே வலிவடக்கு மக்களின் பிரச்சினைகள் 6 மாதத்துக்குள் தீர்க்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

அத்துடன் இதற்கென உடனடியாக செயலணி ஒன்று உருவாக்கப்படும் எனவும் இந்தச் செயலணியில் அரசியல் கட்சிகளை சார்ந்தவர்கள் மற்றும் முப்படைகள் என அனைவரும் உள்வாங்கப்படுவார்கள் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

maith-jaffna-6

maith-jaffna-5

maith-jaffna-4

maith-jaffna-3

maith-jaffna-2

maith-jaffna-1

Related Posts