இலங்கை வந்த இந்திய கிரிக்கெட் வீரர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

17 வயதின் கீழ் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு இலங்கை வருகை தந்திருந்த இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் பயிற்சி பிரதேசத்தில் உள்ள ஹொட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் மாலை ஐந்து வீரர்கள் நீச்சல் தடாகத்தில் குளிக்கச் சென்ற வேளையில், இந்தியாவின் குஜராத் பகுதியைச் சேர்ந்த சோனா நரேந்திரா என்ற வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

பயிற்சியில் ஈடுபட வந்துள்ள இந்திய அணி வீரர்கள் 19 பேர் பமுனுவ ஹோட்டலில் தங்கியுள்ளனர்.

Related Posts