இலங்கை மீனவர்கள் 9 பேர் கைது !!

இந்திய கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நாகபட்டினம் – கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கு இடையில் இந்த மீனவர்கள் நேற்று புதன்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் இவர்கள் பயணித்த இரண்டு படகுகளையும் இந்திய கடற்படையினர் கைப்பற்றியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 9 மீனவர்களும் எந்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தொடர்பில் தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.

Related Posts