இலங்கை மீனவர்களுடனான பேச்சுவார்த்தை திருப்தி: தமிழக மீனவர் சங்கம்

டெல்லியில் இலங்கை மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததாக தமிழக மீனவர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

fishermenindia

டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், இலங்கை மீனவர்களுடன் ஆக்கப்பூர்வமான முறையில் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தெரிவித்தனர்.

இந்த பேச்சுவார்த்தையின் போது சிறையில் இருக்கும் இருநாட்டு மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் பரஸ்பரம் ஒப்படைக்க இருநாடுகள் ஒத்துக் கொண்டதாக தெரிவித்தனர்.

எதிர்வரும் 5ஆம் திகதி டெல்லியில் இருநாட்டு அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்கும் கூட்டத்தில் இருநாட்டு மீனவர் பிரச்சனையில் நிரந்தர தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாக மீனவர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதனிடையே யாழ்ப்பாணம் சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கை ஊர்க்காவல் துறை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இருநாடுகளிடையே பேச்சுவார்தை நடைபெற்றதையொட்டி இலங்கை சிறையில் உள்ள எஞ்சிய 4 மீனவர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts