இலங்கை மின்சார சபை மின் விளக்குகளை பராமரிப்பதில் அதில் திருத்தங்கள் செய்வதில் இன்னமும் மேன்மை அடையவில்லை.- மாநகரசபை உறுப்பினர் பார்த்தீபன் குற்றச்சாட்டு

இலங்கை மின்சார சபை பல விடயங்களில் மேன்மை அடைந்து விட்டது ஆனால் அதன் பராமரிப்பில் உள்ள வீதி மின் விளக்குகளை பராமரிப்பதில் அதில் திருத்தங்கள் செய்வதில் இன்னமும் மேன்மை அடையவில்லை. அசமந்த போக்கே தொடர்கின்றது. என யாழ்.மாநகர சபை உறுப்பினர் பார்த்தீபன் குற்றம்சாட்டியுள்ளார்

அவர் மேலும் தெரிவிக்கையில்

யாழ்.மாநகர சபையின் அனைத்து வட்டாரங்களிலும் வட்டார உறுப்பினர்கள் வீதி மின்விளங்குகளை பூட்டுவதில் சிறப்பாக செயற்பட்டு வருகின்றனர். சிறு ஒழுங்கைகளில் கூட வலுக்கூடிய மின்குமிழ்களை யாழ்.மாநகர சபை பொருத்தி வருகின்றது. அது மட்டுமின்றி அதனை பராமரிப்பத்திலும் கூடிய கரிசனை செலுத்தி திறமையாக செயற்படுத்தி வருகின்றது.

ஆனால் யாழ்.மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட இலங்கை மின்சார சபையின் பராமரிப்பில் உள்ள முக்கிய வீதிகளில் உள்ள வீதி மின் விளங்குகள் தான் பாராமரிப்பின்றி காணப்படுகின்றன. பல மின்குமிழ்கள் பல மாதங்களாக ஒளிராமல் காணப்படுகின்றது.

வீரமாகாளி அம்மன் கோவிலுக்கு முன் உள்ள அம்மன் வீதி முக்கியமானது. இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான 15 மின்விளக்குகளை கொண்ட இவ் வீதியில் 6 மின்விளக்குகள் மட்டுமே ஒளிர்கின்றன. நானும் இரண்டு மாதங்களுக்கு முன் இரு மின்குமிழ்கள் ஒளிராமல் இந்த போது மின்சார சபையிடம் முறையிட தொடங்கினேன். இரண்டு மூன்றாகி , மூன்று நான்காகி இன்று ஏறத்தாழ 9 விளக்குகள் அணைந்து விட்டன. நானும் தொடந்து முறையிட்டு கொண்டு தான் இருக்கின்றேன் ஆனால் செயற்பாடுகள் இடம் பெறவில்லை. அது போல் பிறவுண் வீதி, அன்னசத்திர வீதி, புதிய சிவன் அம்மன் வீதிகளிலும் இந் நிலைதான் காணப்படுகின்றது.

கடந்த 3 மாதங்களுக்கு மேல் பல முறை தொலைபேசியிலும் நேரிலும் முறையிட்டும் மின்குமிழ் இல்லை, பக்கற் வரவில்லை அடுத்த கிழமை செய்யலாம் என்று காரணங்கள் மட்டும் தான் விடைகளாக கிடைகின்றது. ஆனால் இவ்வாறு பல கிழமைகள் சென்று விட்டன.

சிறு சிறு வீதிகள் ஒளிரும் போது முக்கிய வீதிகள் இருளில் காணப்படுகின்றன. இது மக்களுக்கு பல வித சௌகரியங்களையும் பல விபத்துக்களையும் தாண்டி வீதியில் நின்று மது அருந்துவதற்கும் வாய்பளிக்கின்றது.

எனவே சமூகத்தின் தேவை மற்றும் முக்கியத்துவம் கருதி இலங்கை மின்சார சபை தனது பராமரிப்பில் உள்ள மின்விளங்குகளை பராமரிப்பதில் அதனை திருத்துவதில் கூடிய கரிசனை காட்டவேண்டும். என குறிப்பிட்டார்

Related Posts